எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 52 நாட்கள் சிகிச்சை அளித்த பின்னரும் அவரை காப்பாற்ற முடியாதது ஏன் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 52 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் நேற்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.எஸ்.பி.பாலசுப்பி
மேலும், அவரது திருமண நாளான செப்டம்பர் 5ஆம் தேதி அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்து கேக் வெட்டியதை எஸ்.பி.பி பார்த்து ரசித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வாய் வழியே திட உணவுகளை உட்கொள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடங்கினார்.இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதலே அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மூளையில் ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 48 மணி நேரம்எஸ்.பிக்குஉயர் மருத்துவ கண்காணிப்பு
Related Posts
அளிக்கப்பட்டது.மருத்துவ நிபுணர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர போராடினோம். இருப்பினும் அது பலன் அளிக்கவில்லை. அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பு ஏற்பட்டதால், எஸ்.பி.பியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.