ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று (செப்டம்பர் 26) தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.ஜெய்ப்பூரில் ‘அனபெல் சுப்ரமணியம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், விஜய் சேதுபதி, டாப்சி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.