முடிக்கப்பட்ட படங்கள் ரீலீஸ் செய்தபின்பே புதிய படங்களுக்கு பைனான்ஸ்

கொரானா காரணமாக நிறுத்தப்பட்டபடப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன புதிய படங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது ஏப்ரல் மாதத்திற்கு பின் வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்களின் படங்கள் எதுவும் ரீலீஸ் செய்யப்படவில்லை அறிமுக நடிகர்கள், சிறுபட்ஜெட் படங்கள் மட்டுமே கடந்த சில வாரங்களாக வெளியாகி வருகின்றன இவற்றில் எந்தப்படத்திற்கும் குறைந்தபட்ச பார்வையாளர்கள் தியேட்டருக்கு வரவில்லை விதிவிலக்காக இரண்டாம் குத்து படத்துக்கு

குறிப்பிடத்தக்க ஓபனிங், வசூல் இருந்தது அதுவும் மூன்று நாட்களில் முடிந்து போனது படப்பிடிப்பு முடிந்த

நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் வெளியிட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்
இதற்கு காரணம் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி, மற்றும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாதது, தமிழ் படங்கள் அதிகம்திரையிடப்படும்வெளிநாடுகளில் திரையரங்குகள் முழுமையாக இயங்க தொடங்காததால் வணிகரீதியாக நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும் இதன் காரணமாக 10 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட 25க்கும் அதிகமான படங்கள் முடங்கியுள்ளன இதன் காரணமாக இப்படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர்களுக்கு கடன், வட்டி தொகை திரும்பக் கிடைக்காததால் புதிய படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பது சிக்கலை எதிர்நோக்கியுள்ளது அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் சசிகுமார், அரசியலுக்கு போவார் என எதிர்பார்க்கப்படும் விஷால் ஆகியோர் நடிக்கும் புதிய படங்களுக்கு பைனான்ஸ் கொடுக்க வேண்டாம் என்று
பைனான்சியர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது இது சம்பந்தமாக பைனான்சியர்கள் சங்க தரப்பில் விசாரித்த போது அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை ஆனால் புதியதாக தொடங்கப்படும் எந்த படத்திற்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று பைனான்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஏற்கனவே பைனான்ஸ் கொடுத்த படங்களின் பணிகளை முடிக்க உதவி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ரீலீஸ் செய்ய தயாராக உள்ள படங்கள், முடிக்கப்படாத படங்களை முடித்து ரீலீஸ் செய்த பின்னரே புதிய படங்களுக்கு பைனான்ஸ் கொடுக்க வேண்டும் அதை மீறி கொடுக்கும் பைனான்சியர்கள் பணத்தை திரும்ப பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டால் சங்கம் தலையிடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்