கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் டிவிட்டர் மூலம் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவருடைய கோரிக்கையை ஏற்று ஹிந்தி நடிகரான அக்ஷய்குமார் 25 கோடி ரூபாய் வழங்குவதாகஅறிவித்துள்ளார்.
தமிழ் நடிகர்களில் இதுவரை யாருமே பிரதமரின் நிவாரண நிதிக்கு எந்தவிதமான உதவியையும் அறிவிக்கவில்லை. ஆனால், தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் நிதியுதவி அறிவித்துவழங்கிவருகின்றனர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் அவர்கள் சினிமா துறை சார்ந்த பெப்ஸி அமைப்பு, நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டும் கூட இதுவரை எந்த உதவியும் அளிக்கவில்லை.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் மொத்தமாக 4 கோடி உதவி அறிவித்திருந்தார். அது பெரிய தொகை என்று கூறியிருந்த நிலையில் அக்க்ஷய்குமார் 25 கோடி அறிவித்ததால் முண்ணனி நடிகர்கள் இதனை விட அதிகமாக வழங்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளார்.