அமலா பால் அதிரடி முடிவு

0
452

ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் ஆடை. சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதே சமயம், அமலா பால் இப்படத்தில் ஆடையின்றி நடித்ததற்காக கடுமையான கண்டனங்களையும் சந்தித்தது. ஆடை படத்தின் சர்ச்சையைத் தொடர்ந்து, அமலா பால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

2018ஆம் ஆண்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்கு குறும்படங்கள் அடங்கிய திரைப்படமாக வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ். அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜீ, கரன் ஜோஹர் என இந்தி சினிமாவின் முக்கியமான நான்கு இயக்குநர்கள் இதில் இடம்பெற்ற குறும்படங்களை இயக்கியிருந்தனர்.

பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிய இப்படம் வழக்கம் போல சர்ச்சையானது. பல்வேறு அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்திருந்த போதும், இப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற முதல் குறும்படத்தில் அமலா நடிக்கவிருக்கிறார்.

இந்தியில் ராதிகா ஆப்டே நடித்த பாத்திரத்தை தெலுங்கில் அமலா ஏற்கவுள்ளார். இதனை ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here