பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை -3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டதாகவும் அதனால் திறமையான நடிகையாக இருந்தும் ஆண்ட்ரியாவுக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது
இந்நிலையில் சில இணையதளத் தொடர்களில் நடிக்க ஆண்ட்ரியாவை அணுகியபோது தயக்கம் காட்டாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அதுபற்றிய செய்திகள் வந்தன.
இணைய நிறுவனத்துக்காக ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் குறும்படத்தில் நாயகியாக நடிக்க ஆண்ட்ரியாவை தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.