சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சுசிந்திரன்

0
289
கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வந்தார் பெயரிடப்படாத இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார்.  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும்
இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்று செய்திகள் வந்தன.ஆனால், யாரும் எதிர்பாராதவகையில்கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப் படப்பிடிப்பையும் சுசிந்தரன் நடத்திமுடித்துவிட்டார் என்று கூறி படக்குழுவினர் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்
படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இவர் மட்டும் எப்படி படப்பிடிப்பு நடத்தினார்? என்றால், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இணையதளத் தொடர்களுக்கு படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கொடுத்ததைப் பயன்படுத்தி குறைவான ஊழியர்களை வைத்துக்கொண்டு தனது சொந்த ஊர் பகுதியில் படத்துக்கு தேவையான காட்சிகளை ஒன்மோர் கேட்காதவகையில் படப்பிடிப்பை முடித்துவிட்டார் என கூறுகின்றனர்

குறைந்த நாட்களில் குறைந்த செலவில் படமெடுப்பது எப்படி? என்று வகுப்பெடுக்குமளவுக்கு சுசீந்திரன் சிறப்பாகச் செயல்பட்டதாக படக்குழுவினர் பேசி வருவதுஅரசாங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பு ஆகியனவற்றை ஏமாற்றி இவர் மட்டும் படப்பிடிப்பு நடத்தியது எப்படி? என்கிற சர்ச்சையை உருவாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here