இந்தியாவில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் அனைத்து தொழில்களும் முடங்கியது இதில் சினிமா விதிவிலக்கு இல்லை படப்பிடிப்புகள் இல்லை,,பணம் இருந்தாலும் விருப்பபட்ட வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் வீட்டுக்குள் முடங்கினர். சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவு தேவைகளுக்கு பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவலம் இந்த சூழ்நிலையில் சினிமாவில் துணை நடிகர்கள் முதல் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் “கொரோனா விழிப்பு” ஏற்படுத்துகிறோம் என பாடல்களை, கவிதைகளை வெளியிட்டு வந்தனர் அதற்கான தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதை கூட பலர் யோசிக்கவில்லை விழிப்புணர்வுக்காக வீட்டுக்குள் இருந்து கொண்டு அறிவுைரை வழங்கிய பெரும்பான்மையினர் வீதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு களப்பணியாற்றாத கருத்து கந்தசாமிகள்தான் இந்த நிலையில் தமிழ்சினிமா இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
வாழ்க பாரதமாதா வளர்க பாரதிய ஜனதா கட்சி என தீனா பேசியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவதுஇரண்டு ஆண்டுக்கு முன், தியேட்டரில் தேசிய கீதம் ஒளிபரப்பியபோது, சிலர் புறக்கணித்தனர். ஆனால், அதே மக்கள், குடியுரிமை சட்ட திருத்தம்
வந்த பின், தேசியக் கொடியுடன், தேசிய கீதத்தை பாடினர்.
அதே போல், ‘நம் நாட்டை விட, சீன ராணுவம் பலம் வாய்ந்தது’ என, ஒரு புரளி வந்து கொண்டிருக்கிறது. யாரும் கவலைப்படாதீர்கள்; நமக்கு மோடி இருக்கிறார்!இந்த போர், அவர்களுக்கு புதுசா இருக்கலாம். ஆனால், நாம் ஒவ்வொரு நாளும், பாகிஸ்தானுடன் போர் செய்கிறோம். நம் ராணுவத்தை மோடி பலமாக்கியுள்ளார். தவறான தகவலை பரப்பாமல் இருப்போம். மோடி வழி நடப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தீனா பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இருப்பது அவரது தனிப்பட்ட உரிமை, சுதந்திரம் ஆனால் அனைத்து கட்சியினரும் உறுப்பினர்களாக இருக்க கூடிய இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை இது போன்ற தனிப்பட்ட கட்சி விஷயங்களில் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்கின்றனர் திரையுலகினர்
இசையமைப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் மாற்று கட்சியினரும் இதே மனநிலையில பேசினாலும் பகிரங்கமாக முகம் காட்டி பேச மறுக்கின்றனர்.