நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இணைந்து நடித்த வீடியோவை, த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விக்ரம், நல்ல நடிகராக மட்டுமின்றி நல்ல தந்தையாகவும் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். அவரது மகன் த்ருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளுக்கு இடையே இருவருக்கும் இடையேயான நெருக்கமும், குறும்புத் தனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இருவரும் ஒரே படத்தில் எப்போது இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பரவலாக எழுந்துவந்தது.
இந்நிலையில் ஆதித்ய வர்மா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிசயா இயக்கத்தில் த்ருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தின் ஒரு காட்சியில், அவரது அருகில் வந்து விக்ரம் டயலாக் பேசுவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
அப்பா-மகன் இருவரும் இணைந்து நடிப்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.