தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் பட டிரைலர்கள் வெளியாகும் போது அவை புதிய சாதனையைப் படைக்குமா என்ற ஆர்வம் அவர்களது ரசிகர்களுக்கு இருக்கும்.
தமிழ் சினிமாவில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து விஜய் நடித்த ‘பிகில்’ படம் புதிய சாதனைகள் சிலவற்றைப் படைத்தது.’பிகில்’ டிரைலர் 2 மணி நேரம் 45 நிமிடங்களில் 1 கோடி பார்வைகளையும், 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்குள்ளாக 20 லட்சம் லைக்குகளைப் பெற்று இதற்கு முன்பு இந்தியத் திரையுலகத்தில் ஷாரூக்கான நடித்த ‘ஜீரோ’ பட லைக்குகள் சாதனையை முறியடித்தது.ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் டிரைலர் 26.12.2019 அன்று வெளியானது
அது ‘பிகில்’ பட டிரைலரின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த சாதனையை ‘தர்பார்’ டிரைலரால் நெருங்கக் கூட முடியவில்லை. எனவே, தயாரிப்பு நிறுவனம் மூன்று மொழிகளின் ஒட்டு மொத்த பார்வை எண்ணிக்கை, லைக்குகள் ஆகியவற்றை மட்டுமே தற்போது பதிவிட்டு வருகிறது.’
தர்பார்’ டிரைலர் மூன்று மொழிகளிலும் சேர்த்து 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ் டிரைலரைவிட ஹிந்தி டிரைலர் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. மூன்று மொழிகளிலும் லைக்குகளின் எண்ணிக்கை 7 லட்சத்தை மட்டுமே கடந்துள்ளது.
விஜய் பட சாதனையை விஜய் மட்டும்தான் முறியடிக்க முடியும் போலிருக்கிறது.