தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productionsபடம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜேஷ் கூறியதாவது…
“டாக்டர்” திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது.
“டாக்டர்” திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் “டாக்டர்” திரைப்படத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது.
எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் வெளியீட்டுக்காக காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது.
இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில் “டாக்டர்” திரைப்படத்தை தியேட்டர்களில் கொண்டு வருகிறோம். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும்.
தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தை புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் “டாக்டர்” திரைப்படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தில்சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் ஹிட்டாகியுள்ளது. ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தில்சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் ஹிட்டாகியுள்ளது. ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார்.