இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும்படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்தார்.தொடர்ந்து கமல் பேசும்போது,

சிறுவயதிலிருந்து இந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதற்கான இன்னொரு அசம்பாவிதம் இங்கு நடந்துள்ளது. இன்று காலையில் கூட நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற இன்னொரு நிகழ்வு நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அது அனைத்தையும் திரைத்துறை செய்ய வேண்டும்.

100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என மார்தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான ஒரு பாதுகாப்பை அளிக்க முடியாத ஒரு துறையாக இருப்பது அவனமானத்துக்குரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் முடிந்தது இந்தக் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன்.

என்று சொல்லியிருந்தார்.

அது இன்று நடந்திருக்கிறது. இன்று திரைப்படத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்வில், இந்தியன் -2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர்,ஆர்,கே,செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திரன் மனைவி திருமதி ராதா, மதுவின் தந்தை மாலகொண்டையா, உதவி இயக்குநர் கிருஷ்ணாவின் மனைவி அமிதா ஆகியோர் தலா ஒரு கோடி உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.நான்காவதாக லைட்மேன் ராமராஜனின் சகோதரியும் நிவாரணத்தொகையைப் பெற்றுக் கொண்டார்.படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 இலட்சம் நிவாரணமும் சிறு காயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் நிவாரணமும் கொடுக்கப்பட்டது

இந்த நான்கு கோடியில் லைகா நிறுவனம் 2 கோடியும், கமல் ஒருகோடியும் இயக்குநர் ஷங்கர் ஒரு கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்