புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன.

நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார்.

இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், புதிய சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள பதிவில்….

முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேர் கமல்ஹாசனின் வழிமொழிதல் அகமகிழ்வைத் திருகிறது.மூத்ததொரு கலைஞனின் “தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்” காலத்தின் தேவையென்ற புரிதல் போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக ‘நம்’ தொடக்கம் போராடி நிரூபிக்கும்
நன்றிகள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய கமல் முன்வந்ததையடுத்தே இந்தப் பதிவு என்று சொல்லப்படுகிறது.