கமல்ஹாசனுக்கு கார்டூனிஸ்ட் மதன் ஏற்படுத்திய நெருக்கடி

இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதியன்று EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்தியன்- 2 படப்பிடிப்பு இடைவேளையில் கிரேண்இடமாற்றம் செய்தபோது அது முறிந்து விழுந்துநடந்த விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர்.அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் கார்டூனிஸ்ட் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு

நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குனர் ஷங்கர், கமலஹாசன் தரப்பில் அப்போது அறிவிக்கப்பட்டது
நேற்று நடந்த எளிய நிகழ்வில் உயிர் இழந்தவர்களின் குடும்பம், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது
கிருஷ்ணாவின் மனைவி அமிதா நேற்றைய நிகழ்வில் நிவாரண தொகைக்கான காசோலையைபெற்றுக் கொண்டார்.வெளிப்படையாக இந்நிகழ்வுநடந்தது
அனைவருக்கும் தெரியும்.அதற்கு முன்பாக திரைமறைவில் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் யாருக்கு என்பதில்பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறது.
அதன்விவரம்…
கிருஷ்ணாவுக்கு ஒரு கோடி நிவாரணம் என்றதுமே அந்தத் தொகையை எங்களிடம்தான் தர வேண்டும் என்று கிருஷ்ணாவின் அம்மா கோரிக்கை வைத்திருக்கிறாார்.

ஆனால்மதன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். என் மகளின் எதிர்காலம், பேரக்குழந்தையின் எதிர்காலத்துக்கு அந்தத் தொகை மிகவும் அவசியம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

அதன்பின், கிருஷ்ணாவின் தாயார் கமலிடம் போய், கிருஷ்ணாவை வளர்த்து ஆளாக்கி அவன் எதிர்பாராத விதமாக மரணித்த சில நாட்கள் முன்புவரை அவனுடைய செலவுக்கு நாங்கள்தான் பணம் கொடுத்தோம்.
இப்போது நாங்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். எனவே அந்தத் தொகையை எங்களிடம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

எப்படியிருப்பினும் அந்தப் பெண் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் அதனால் அந்தப்பெண்ணின் எதிர்காலத்துக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்பது அவர்களுடைய வாதம்.
அதையொட்டி  மதனிடம் கமல் பேசியும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்பின் கமல் மிகவும் வலியுறுத்திச் சொன்னதால் மதன் விட்டுக் கொடுத்தாராம்.
அதன்படி அந்தத் தொகையில் அறுபது விழுக்காடு மதனின் மகளுக்கும் நாற்பது விழுக்காடு கிருஷ்ணாவின் அம்மாவுக்கும் கொடுப்பது என்று முடிவாகியிருக்கிறதாம்.
எதிர்பாராமல் வந்த இந்த பஞ்சாயத்தால் கமல் மிகவும் வேதனை அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.