ரஜினி படத்தை கௌதம் இயக்குவது எப்போது?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது.

இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன்.

அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்…

இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன். அண்மையில் நான் அவரைச் சந்திக்கக் கூட இல்லை.

துருவ நட்சத்திரம் பட சமயத்தில் ரஜினியைச் சந்தித்து ஒரு கதை சொன்னேன். நான்கு மணி நேர சந்திப்பு நடந்தது. அடுத்து அவரை வைத்து நான் இயக்குவேன் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை.

அப்போதுதான் அவர் கபாலி படத்தில் நடித்தார்.

அதன்பின் அவரை நான் சந்திக்கவில்லை. அதே நேரம், அவருக்குப் பொருத்தமான கதை என்னிடம் இருக்கிறது.எல்லாம் சரியாக அமைந்தால் அது நடக்கும்.

இவ்வாறு கெளதம்மேனன் கூறினார்.