இரட்டை நாயகர்கள் நடிக்கும் தீங்கிரை

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  படமாக இருக்கிறது.

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். நிர்வாக தயாரிப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோல் கே.எஸ். ஷங்கர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.