யாரும் எதிர்பாராத வகையில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைப்படம் நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இருந்தபோதும் சுமாரான வசூல் பெற்றது. தொடர் தோல்விப் படங்களை எதிர்கொண்டு வந்த விஜய் ஆண்டனி, தான் நடித்த கொலைகாரன் படத்தை திட்டமிட்ட அடிப்படையில் மார்க்கெட்டிங் செய்து, ரிலீஸ் செய்ததால் முதலுக்கு மோசம் செய்யாத வசூல் பெற்றார்.
ஏராளமான பிரச்னைகளை சந்தித்து, விஜய் சேதுபதி நேரடியாகத் தலையிட்டு சில சமரச முடிவுகளை மேற்கொண்ட பின்னரும் பலமுறை அறிவிக்கப்பட்டும் வெளிவராமல் போன சிந்துபாத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் வசூல் மிக மோசமாக, வந்த வேகத்திலேயே முடங்கி போனது.
வடிவேல் நடிப்பதை நிறுத்திக்கொண்ட பின்னர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்து வந்த எவராலும் முடியவில்லை. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அதிக படங்களில் காமெடியனாக நடித்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் யோகி பாபு. அவர் கதாநாயகனாக நடித்த தர்மபிரபு படம் வந்த வேகத்தில் திரும்பி விடும் என்று சினிமா வியாபாரிகளும், விமர்சகர்களும் கூறிக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் அனைத்து உரிமைகளையும் அவுட் ரேட் முறையில் விற்பனை செய்தனர். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை. ஜூன் மாதம் வெளியான பிற திரைப்படங்கள் அனைத்தும் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவியது.
ஜூன் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்
1.7
2. கொலைகாரன்
3. கேம் ஓவர்
4. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
5. சுட்டு பிடிக்க உத்தரவு
6. மோசடி
7. தும்பா
8. சிந்துபாத்
9. தர்மபிரபு
10. ஹவுஸ் ஓனர்
11. சிவி
12. நட்சத்திர ஜன்னல்