காமராஜர் வரலாற்றை ஒன்பது மொழிகளில் வெளியிட்ட காமராஜர் படக்குழு

இன்றைய இளைய சமூகமான மாணவர், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுவது பெருந்தலைவர் காமராஜரைதான்
 அவர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது மக்கள் நலனுக்கு, கல்வி, விவசாயத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் பற்றியும், அது சம்பந்தமாக அரசு அலுவலர்கள், அதிகாரிகளிடம் அவரது அணுகுமுறை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பகிர்ந்து வருகின்றனர்
ரமணா கம்யூனிகேஷன் சார்பில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான காமராஜர் திரைப்படத்தில் பெருந்தலைவர் காமராஜர் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சில காட்சிகள் வலைத்தளங்களில் பகிரப்பட்டு அதனை லட்சக்கணக்கானோர் பார்த்து தங்கள் நட்பு வட்டங்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்
அந்த “காமராஜர்” படத்தை தயாரித்து இயக்கிய பாலகிருஷ்ணன் உலகமெங்கும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜர் பொக்கிஷம் மாணவர்களுக்கு” எனும் பெயரில்நூல் தயாரித்திருக்கிறார்
காமராஜர் வாழ்க்கை வரலாறு தமிழ், ஆங்கில மொழிகளில் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது
இன்றுபகாமராஜர் அவர்களின்119 வது பிறந்தநாள் இதனையொட்டி அவர் இறுதிக்காலம் வரை வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் இன்று.காலை 10 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் தமிழ் பதிப்பையும்
 எவர் வின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் Dr. புருஷோத்தமன் ஆங்கில பதிப்பையும் வெளியிட்டனர்
தமிழ் பதிப்பை வெளியிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் பேசுகிறபோது காமராஜர் புகழ் பரப்புவதை தனது முழு நேர பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறார் பாலகிருஷ்ணன் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி தயாரித்து இருக்கிறார்
அப்படத்தை பல்வேறு மொழிகளில் சப்டைட்டிலுடன் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார் காமராஜர் போன்று திருமணம் செய்துகொள்ளாமல் இன்றளவும் அவரது புகழையும், அவர் வழிநடத்திய அரசியலையும் திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன் இன்றைய இளம் மாணவ சமூகத்திடம் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்
அரசியல் கட்சிகள் செய்யவேண்டிய பணியை லாபநோக்குடன் செயல்படும் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர் பாலகிருஷ்ணன் இப்போது செய்துள்ளார் அதிகபட்சமாக தமிழ்,ஆங்கில மொழிகளில் மட்டுமே காமராஜர் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது இன்று காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ரஷ்யன், பிரெஞ்சு, ஜப்பான் என ஒன்பது மொழிகளில் காமராஜர் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது இவரது புத்தக வெளியீடு, திரைப்பட முயற்சிகளுக்கு நானும் நான் சார்ந்ததமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எப்போதும் துணை இருப்போம் என்றார்