கர்ணன் படப்பிடிப்பு முடிவடைந்தது

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘கர்ணன்’.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கொரானோ ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

அது குறித்து படத்தின் நாயகன் தனுஷ், “கர்ணன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைக் கொடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. வி கிரியேஷன்ஸ் தாணு சாரின் ஆதரவுக்கு நன்றி. என்னுடன் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

இந்த ஸ்பெஷல் ஸ்பெஷல் படத்திற்கு மிகப் பெரும் இசையைக் கொடுத்த சந்தோஷ் நாராயணனுக்கு சிறப்பு நன்றி,” என டிவீட் செய்துள்ளார்.

“இத்தகைய கடும் சூழலிலும் ‘கர்ணன்’ படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்லபடியாக முடித்து தந்தமைக்கு தனுஷ், மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  ‘கர்ணன்’ திரைப்படம், அசுர வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை,” என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.