விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது.

அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார்.

இன்று இப்படத்துக்கான அலுவலக பூசை எளிமையான முறையில் போடப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இப்பட அறிவிப்புக்காக விஜய்யை வைத்து சிறிய அளவில் படப்பிடிப்பு இரண்டுநாட்களுக்கு முன்பாக நடந்திருக்கிறது.

இன்று மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

வழக்கம்போல் அறிவிப்பில்லாமல் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் கலாநிதிமாறன், விஜய், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இருக்கும் ஒரு காணொளி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.