விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தைத் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பையும் தள்ளி வைக்கவேண்டிய நிலை படக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஒருவேளை கொரோனா பாதிப்பு மோசமாகி மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகும் தியேட்டர்களை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டால், ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் மாஸ்டர் படத்துக்குப் பிரச்சினையாகும்.
படக்குழுவினரின் தற்போதைய திட்டப்படி, மார்ச் 21ஆம் தேதி இரவு மாஸ்டர் படத்தின் டீசரையும், அதன்பிறகு மார்ச் 31 வரை சில பாடல் வீடியோக்களையும் ரிலீஸ் செய்துவிட்டு, மார்ச் 31க்குப் பிறகு சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பார்த்துவிட்டுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கும் முழு விருப்பமில்லாமல் தலையாட்டியிருக்கிறார் விஜய். எனவே, டிரெய்லர் ரிலீஸ் இப்போதைக்கு நடைபெறுவது சந்தேகம்தான் என்கின்றனர் படக்குழுவினர்.