மே-2019 தமிழ் சினிமா வசூல்ராஜா?

கோடை விடுமுறைமே மாதம்திரைப்படங்கள் பார்ப்பதுஅதிக மாக இருக்கும் அதனால் புதிய படங்கள் அதிகமாக வெளிவரும் 31 நாட்களில் 25நேரடி தமிழ் படங்கள் மே மாதம் ரீலீஸ் ஆகியுள்ளது

முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியானேதேவராட்டம் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படமாகும்
தமிழகத்தில் இப்படம் சுமார் 10 கோடி வரை மொத்த வசூல் செய்தது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாகும்

ஜீவா நடிப்பில் வெளியான கீபடம்முதல் மூன்று நாட்கள் கூடதிரையரங்குகளில் தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பியது

விஷால் நடிப்பில் வெளியானஅயோக்கியாவந்த சுவடு தெரியாமல் வசூல் ரீதியாகதோல்வியை தழுவிய படமாகும்

எஸ் .ஜே. சூர்யா நடிப்பில்
எலியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மான்ஸ்டார் குறைந்தபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு எந்தவிதமான ஆடம்பர விளம்பரமும் இன்றி வெளியாகி கல்லாவை நிரப்பியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் பெரிதும் எதிர்பார்ககப்பட்ட படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியது

தேவி படம் வெற்றிபெற்றதால் அதே கூட்டணியில் தேவி-2 தயாரிக்கப்பட்டது ஆனால் பாக்ஸ்ஆபீசில் இப்படம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த சூர்யா நடிப்பில் வெளியானNGK வெற்றிபெறவில்லை

25 படங்களில் மேற்குறிப்பிட்ட படங்களை தவிர மற்றபடங்கள் அனைத்தும் பெயரளவில் திரைக்கு வந்து குறைந்தபட்ச வசூல் கூட செய்யாமல் திரும்பியபடங்களாகும்

இந்த மாதத்தில் வெளியான படங்களில் தேவராட்டம் மான்ஸ்டார் படங்கள் மட்டுமே லாபகரமான படங்கள்

விஷாலின் அயோக்யா சுமார் 10 கோடியும்
மிஸ்டர்லோக்கல் சுமார் 30போடி சூர்யா நடிப்பில் வெளியான NGK 28 கோடி ரூபாய்மொத்த வசூல் செய்த படங்கள் இந்தபடங்களின்
பட்ஜெட் வியாபாரம் ஆகியவற்றில் 50 சதவீதத்தை கூட மொத்த வசூலாக தமிழகத்தில் வசூலிக்கவில்லை

மொத்தத்தில் மே மாதம் வசூல் மாதமாக இருப்பதற்கு பதில் வசூல் வறட்சியை ஏற்படுத்தியதுஎன்றே குறிப்பிடலாம் இதற்கு காரணம் படங்களில் உள்ளடக்கம் காரணமாகும்

மே படங்கள்:தேவராட்டம்,
K-13,
தனிமை,
தந்தைசொல்மிக்க மந்திரமில்லை,
எங்கே சென்றாய்என்உயிரே,
காதல் முன்னேற்ற கழகம்,
கீ,
உண்மையின் வெளிச்சம், வேதமானவன்,
100,
அயோக்கியா,
ஜெயிக்கப்போவது யார்,
மான்ஸ்டார்
Mrலோக்கல்,
நட்புனாஎன்னனுதெரியுமா,
லிசா,
நீயா 2,
சீனி,
ஒளடதம்,
பேரழகிISO,
ருசித்துபார்என்அன்பே,
வண்ணக்கிளி பாரதி,
தேவி-2,
என். ஜி.கே, திருட்டுகல்யாணம்(25)