ஏப்ரல் 2019 தமிழ் சினிமாவசூல்ராஜா?

0
294

மார்ச் மாதத்தில்இறங்கு முகத்தில் இருந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல்காஞ்சனா -3பட வெற்றியின் மூலம் கல்லா நிரம்பி வழிந்தது என்று கூறலாம்

இசைப்பதற்கு இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில் இசையும் நானே நாயகனும் நானே என்று கூறி இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு இயந்திரமாக இயங்கி வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்
2019 ஆம் வருடம் அதிக படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமைக்குசொந்தக்காரர் ஜி.வி பிரகாஷ்
ஆனால் இவர் நடித்த எந்த படமும் இந்த வருடத்தில்வெற்றி பெறவில்லை என்பது அவருக்கு மட்டுமல்ல தயாரிப்பாளருக்கும்
நஷ்டத்தை ஏற்படுத்திய கதாநாயகன்

குப்பத்துராஜா வாட்ச்மேன் என இரு படங்கள்இவர் கதாநாயகனாக நடித்து
வெளியான படங்கள் இரண்டுமே வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறியது

இசையமைப்பாளர் ஹிப் ஆப் தமிழா
வருடத்திற்கு ஒரு படமாவது கதாநாயகனாக நடித்து விடுவார் அப்படி வந்த படம் நட்பே துணைமிகப்பெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும்
சராசரிவசூல் படமாககடந்து போனது

படைப்பு ரீதியாக நிகழ்கால அரசியலை சமரசமின்றி தோலுரித்துக் காட்டியதிரைப்படம் உரியடி- 2
விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வழக்கம்போல் கருத்து சொல்லும் படங்கள் கட்டுவதில்லை அதற்கு உரியடி- 2விதி விலக்கு இல்லை என்பதை உறுதி செய்த படமாக அமைந்து போனது

வள்ளி திருமண நாடகத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் எல்லாம் கவனிக்கப்படாமல் தூங்கி வழியும் பார்வையாளன் காமெடி செய்யும்பபூன்
மேடையில் தோன்றிய உடன் தூக்கம் கலைந்து எல்லோரும் எழுந்து அமர்ந்து
விடுவது வாடிக்கை அதைப் போன்றுதான் காஞ்சனா – 3வெளியான பின்னர் திரையரங்குகள் குடும்பங்கள் கூடிய
கூட்டத்தை எதிர்கொண்டது படைப்பு ரீதியாக இந்த படத்திற்கு எதிர்மறையான
விமர்சனங்கள் வந்தாலும் குழந்தை முதல் பெரியவர் வரை காஞ்சனா-3
படம் பார்க்க திரையரங்குக்கு வந்து சென்றன இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில்அரசு நிர்ணயித்தநியாயமான விலையில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது காஞ்சனா – 3படத்திற்குத் தான் தமிழகத்தில் பாகுபலி படம் வெளியாகும் வரை அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக காஞ்சனா-1இருந்து வந்ததுஅந்த சாதனையை மொழிமாற்று படமானபாகுபலி -2முறியடித்தது

நேரடி தமிழ் படங்களில்இன்றுவரை காஞ்சனா-1 காஞ்சனா -2 காஞ்சனா- 3படங்களை பார்த்த பார்வையாளர் எண்ணிக்கையை ரஜினி அஜித் விஜய் நடித்த படங்கள் இதுவரை முறியடிக்கவில்லை என்கிற சாதனையை இந்த படங்கள் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது

மற்ற படங்கள் அனைத்தும் முதலுக்கு மோசம் செய்த படங்களாகும்ஏப்ரல் மாதம் வெளியான 15படங்களில்
மொத்த முதலீடு சுமார் 150 கோடி ரூபாய் இதில் காஞ்சனா-3 மட்டும் அனைத்து தரப்புக்கும் லாபம் கிடைத்த படம்தமிழக திரையரங்குகளில் இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது

படப்பட்டியல்:
நட்பே துணை,
கணேசா மீண்டும் சந்திப்போம்,
குப்பத்து ராஜா,
குடிமகன்,
ஒரு காதல் சொல்லட்டுமா,
உறியடி – 2 ,
கேங் ஆப் மெட்ராஸ்,
ராக்கி,
வாட்ச்மேன்,
சக்கரம்,
காஞ்சனா-3,
மொகந்தி சர்க்கஸ்,
வெள்ளைப்பூக்கள்,
அழகரும் 2 அல்லக்கைகளும்,
முடிவில்லா புன்னகை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here