பாரதிராஜா தலைமையில் படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம்

தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது 4500 உறுப்பினர்கள் இருக்கும் இந்த சங்கத்தில் 1300 தயாரிப்பாளர்கள் வாக்குரிமை உள்ளவர்களாக உள்ளனர்

சங்கத்திற்குகடந்த முறை நடைபெற்ற தேர்தலில்நடிகர் விஷால் தலைவராக வெற்றிபெற்றார் அவர் தலைமையிலான நிர்வாக குழு இரண்டு ஆண்டுகள் முழுமையான பதவி காலத்தில் ஆக்கபூர்வமான பல்வேறு முயற்சிகளை தயாரிப்பாளர்கள் நலனுக்காகமேற்கொண்டது அந்த முயற்சிகள் எதையும் அமுல்படுத்தவிடாமல் விஷாலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவது, சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் தகராறு செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இதன் காரணமாக விஷால் தலைமையிலான நிர்வாக குழுவை கலைத்துவிட்டு தனி அதிகாரியின் நிர்வாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழக அரசு கொண்டுவந்தது
கடந்த ஒரு வருட காலமாக பலமுறை தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிட்டும் பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை இந்த சூழ்நிலையில் கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்படத்துறை முடங்கியுள்ளது.
திரையரங்குகளை மீண்டும் திறக்கவும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகளை மீண்டும் தொடரவும் தமிழக அரசை அணுகி அனுமதி பெற தேர்ந்தெடுக்கப்பட் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இல்லை.
மூத்த தயாரிப்பாளர்கள், தற்போது படத்தயாரிப்பில் உள்ள தயாரிப்பாளர்கள் இணைந்து தமிழக அரசிடம் கோரிக்கை மகஜர் கொடுத்தனர் எங்களை கேட்காமல் நீங்களாக எப்படி போகலாம் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன இப்படி குரல் கொடுத்தவர்கள், அநாகரிகமான விமர்சனம் செய்தவர்கள் அனைவரும் சமீப வருடங்களாக படத்தயாரிப்பில் இல்லாதவர்கள் இவர்களது அநாகரிகமான செயல்களை ஏற்க முடியாத தயாரிப்பாளர்கள், தற்போது கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு
என தனி அமைப்பை தொடங்குவது என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்
ஏற்கனவே தெலுங்கு திரைப்பட துறையில் படம் தயாரிப்பில் உள்ள தயாரிப்பாளர்கள் “ActiveTeluguFilmProducersGuild” என்கிற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர் அதேபோன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் தற்போது படத்தயாரிப்பு தொழிலை செய்துவருபவர்கள் ஒருங்கிணைந்து பாரதிராஜா தலைமையில் புதிய சங்கத்தை( ஆகஸ்ட் 2 அன்று) வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு அன்று தொடங்கவுள்ளனர்.
சங்கத்தின் பெயர் பலகையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்துவைக்க விருப்பதாக கூறப்படுகிறது
சங்கத்தின் தலைவராக இயக்குனர்:பாரதிராஜா, செயலாளராக :T.சிவா, பொருளாளராக :சத்யஜோதி தியாகராஜன், துணை தலைவர்களாக: S.R.பிரபு, தனஞ்ஜெயன், கௌரவ செயலாளர்களாக: சுரேஷ் காமாட்சி, மாஸ்டர் பட நிர்வாக தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்