பாரதிராஜா பின்வாங்க காரணம் பணமா பாசமா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு செப்டம்பர் 2020க்குள்தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இதன் காரணமாக தேர்தலில் போட்டியிட அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் தலைமையில் ஒரு அணி, கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது
சங்கத்தில் 4000ம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் 1300 பேர் மட்டுமே வாக்களிக்கும் தகுதிபெற்றவர்கள் இவர்களில்  தொடர்ந்து திரைப்பட தயாரிப்பில் இருப்பவர்கள் சுமார் 5% மட்டுமே மற்றவர்கள் எல்லாம் சங்கத்தை ஒரு நிவாரண மையமாக, அரசின் மூலம் உதவிகள் பெற்று தரக்கூடிய அமைப்பாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்
இவர்களால் சங்கத்திற்கு, தமிழ்சினிமாவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களில் செட்டிலாகி, வெவ்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்

இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான முன்முயற்சியை மாநாடுதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிமூலம் பாரதிராஜா மேற்கொண்டதன் விளைவாக தமிழ் சினிமா மொத்த முதலீட்டில் 70% முதலீட்டை கையாளும் திரைப்பட தயாரிப்பு

நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா தலைமையிலான
Active Tamil Film Producers அமைப்பில் இணைவதற்கு ஆதரவு தந்தனர்
இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்தச் செய்தி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. பலர் இப்படி ஒரு சங்கம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய சங்கத்தைத் தொடங்கி வைக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.அதனால், பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்பட்டது. ஆகஸ்ட் 2 அன்று சங்கம் தொடங்கப்பட்டது பற்றிய அறிவிப்பை பாரதிராஜாவெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்து
காத்திருந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக
பாரதிராஜா விடுத்த அறிக்கை அமைந்தது
அதில் அவர்கூறியிருப்பதாவது……

நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளதுஇவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
புதிய சங்கம் தொடர்பாகச் சில வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் தொடக்கவிழா நடக்கவிருந்த நிலையில் பாரதிராஜா தங்களிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை வெளியிட்டதுஅவரது முயற்சிக்கு ஆதரவு வழங்கிய, அவரை நம்பி அணிவகுத்த தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது

பாரதிராஜாபின்வாங்கியது ஏன்? என்பது பலரின் கேள்வியாக திரைப்பட துறையில் விவாத பொருளாக மாறிவருகிற நிலையில்
இப்படி ஒரு புதிய சங்கம் உருவாவதை விரும்பாத தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இச்சங்கத்துக்கு எதிராகப் பலரைப் பேச வைத்ததோடு தமிழக முதல்வர் அலுவலகம் வரை தொடர்பு கொண்டு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது
இன்னொரு பக்கம், புதிய சங்கத்தின் பொறுப்பாளர்கள் என்று ஒரு பட்டியல் வெளியானது. அப்பட்டியல், பாரதிராஜாவின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டதாகவும் அதனால் மிகவும் கோபமடைந்த பாரதிராஜா, முதல்வரைச் சந்திக்க மட்டும் நான் தேவை மற்ற விசயங்களை நீங்களே முடிவு செய்வீர்களா? என்று கத்தியதாக்வும் சொல்லப்படுகிறது.
இது பற்றி இச்சங்க உருவாக்கத்தில் தொடக்கம் முதல் பணியாற்றிவரும் மூத்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசியபோது இப்படி ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தது பாரதிராஜா முதல் சந்திப்பிலேயே நிர்வாகிகளாக யார்யார் இருக்க வேண்டும் என்பதை அவர் கூறியதை சிலர் மறுத்த போதும் இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தியது பாரதிராஜா எனவே நிர்வாகிகள் யார் என்பதை அவர் தீர்மானித்தார்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக வேண்டும் என்பது கலைப்புலி தாணுவின் ஆசை, வேறு அமைப்பு தொடங்கப்பட்டு விட்டால் ஏற்கனவே உள்ள சங்கத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். சங்கத்தை நிவாரண மையமாக பயன்படுத்தி வரும் தயாரிப்பாளர்கள் இனி நிவாரணம் கிடைக்காதே என்கிற ஆதங்கத்தில் கடுமையான எதிர்ப்பு குரல் எழுப்பியதுடன் தமிழக முதல்வருக்கு புகார் மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வந்தனர் இவை அனைத்தையும் புறந்தள்ளினார் பாரதிராஜா
பாசத்துக்கும், பணத்துக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் பாரதிராஜா 77 வயதை எட்டியுள்ள பாரதிராஜா இயக்கி குறைந்தபட்ச ஆதரவைப் பெற்ற படம் 2008 ஆம் ஆண்டு வெளியானபொம்மலாட்டம் அதன் பின் இவர் இயக்கத்தில் நடிக்கவோ, தயாரிக்கவோ இங்கு எவரும் தயாராக இல்லை
இந்த சூழ்நிலையில் கலைப்புலி தாணு பாரதிராஜாவை தொடர்பு கொண்டு “கிழக்கு சீமையிலே – 2 “படத்தை தாங்கள் முதல் பிரதி அடிப்படையில் இயக்க வேண்டும் அல்லது உங்கள் கனவுப்படமான “குற்றப்பரம்பரை” படத்தை இயக்க வேண்டும் என கூறியுள்ளார். பட்ஜெட் என்ன, இதற்கு பாரதிராஜா சம்மதம் தெரிவிக்கிறாரா என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாத கலைப்புலிதாணு எனது பட்ஜெட் 9 கோடி என அடுத்த அஸ்திரத்தை ஏவ பாசத்துக்கும், பணத்துக்கும் அடிமையாகும் இயக்குனர் இமயம் பாரதிராஜா தாணுவின் பிரம்மாஸ்திரத்துக்கு அடிபணிந்தது அதன் விளைவாகவே சக நிர்வாகிகளிடம் கூட கலந்து பேசாமல் பாரதிராஜா அவசரமாக அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர்
இந்த குற்றசாட்டை வதந்தி என மறுக்கிறதுகலைப்புலி தாணு தரப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு போட்டியின்றி பாரதிராஜாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கூறி வருபவர் தாணு . அவர் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர், சினிமா கடவுளாக இயக்குனர் இமயத்தை நான் பார்க்கிறேன் என சில தினங்களுக்கு முன் கலைப்புலி தாணு பத்திரிகையாளர்களிடம் பேசியதும் பாரதிராஜாமனதை மாற்றியது என்கின்றனர்