கல்கி எழுதிய வரலாற்று சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், லால், ஐஸ்வர்ய லட்சுமி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
Related Posts
தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்திற்கான தலைப்பை லோகோவாக நீண்ட வாளில் ‘பொன்னியின் செல்வன்’ என வெளியிட்டுள்ளனர்.
கூடவே படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.அதன் விபரம் வருமாறு: கதை: கல்கி, இசை: ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு: ரவி வர்மன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத், வசனம்: ஜெயமோகன், திரைக்கதை: மணிரத்னம், குமரவேல், ஆக்ஷன்: ஷாம் கவுசல், காஸ்டியூம் டிசைனர்: ஏக்கா லகானி, சிகை அலங்காரம்: விக்ரம், நடனம்: பிருந்தா, தயாரிப்பு: லைகா சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம், இயக்கம்: மணிரத்னம்.
Prev Post