சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனை, மெரினா படம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டியராஜ். இதில் ஓவியா நாயகியாக நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது.
இதையடுத்து சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில், கேடி பில்லா கில்லாடி ரங்காவை இயக்கினார் பாண்டிராஜ். பிந்து மாதவி, ரெஜினா ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள், நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் மூலம் இணைந்தனர்
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி, நட்டி, பாரதிராஜா, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். டி.இமான் இசை அமைத்திருந்தார்.இந்தப் படம் தமிழகத்தில்60 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து வெற்றி பெற்றது
இதையடுத்து ஓய்வில் இருந்த இயக்குனர்பாண்டிராஜ்சிவகார்த்தி
இதுவும் குடும்பக் கதை என்று தெரிகிறது.
இதிலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதன் மூலம் நான்காவது முறையாக இருவரும் இணைகின்றனர். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.