ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்கும் தயாரிப்பாளர்

தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவுசெய்கிறார்.

இந்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன

இப்படத்தின் படப்பிடிப்பு தை தமிழ் மாதம் பிறந்ததும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தப்படத்தின் பெயரை அறிவித்தாலும் இயக்குநர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.
இப்படத்தை இயக்கப்போகிறவர் தயாரிப்பாளர் கதிரேசன் தானாம். அனைவரும் ஆச்சரியப்படத்தக்க இவ்விசயத்தை உடனடியாக வெளியே சொல்லாமல் படப்பிடிப்பு தொடங்கும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று இருக்கிறார்களாம்.இந்தப்படத்தை இயக்குவது மட்டுமின்றி கதையையும் அவரே எழுதியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.நீண்டநாட்களாகவே அவருக்கு இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது என்றும் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார் என்றும் சொல்கிறார்கள்.
இப்போது அவர் இயக்குநராகும் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.