நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார்.இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக் கு டி.இமான் இசையமைக்கிறார்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்
வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் கொரானா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
இதனால் 2020தீபாவளி வெளியீடு என்பதும் தள்ளிப்போனது.
அதன்பின் மே 12 அன்று, இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல்திரைப்படப்படப்பிடிப் புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.அதைத் தொடர்ந்து பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவது தொடர்பாக ரஜினியிடம் கேட்டபோது அவரும் சம்மதித்தாராம்.இதனால் உற்சாகமான படக்குழு படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகிவந்தது.ஐதராபாத்திலுள் ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடுகிறார்கள்.அக்டோபர் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.அக்டோபர் 8 ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் பல நடைமுறைச் சிக்கல்களால் அது நடக்கவில்லை. அடுத்து எப்போது தொடங்கும் என்பது பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்தது.இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 15 ஆம்ம் தேதி தொடங்குகிறது எனவும் அறிவித்துள்ளது.அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மே 12 அன்று, இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல்திரைப்படப்படப்பிடிப்