இதயத்திலிருந்து நன்றி சொல்லும் ஸ்ருதிஹாசன்

நடிகையும், கமல் மகளுமான ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார்.

2009 ஆண்டு வெளியான ‘லக்’ இந்தி திரைப்படத்தில்  ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. நடிகர் கமல்ஹாசனின் மகள் என்னும் அடையாளத்துடன் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த நடிகை ஸ்ருதி ஹாசன், தொடர்ந்து கதாநாயகியாகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையால் திரைத்துறையில் தனித்துத் தெரிந்தார்.2011ஆம் ஆண்டு ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், அதனைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ‘3’ விஷாலுடன் ‘பூஜை’, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’, அஜித்துடன்‘வேதாளம் , சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலு நடித்துவந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த நிலையில் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இத்தனை வருடங்களாக நான் செய்த வேலைகள், நினைவுகள் கற்ற பாடங்கள், சந்தித்த ஏற்ற இறக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் அன்பு என அனைத்தையும் தந்த அனைவருக்கும்மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.