சினிமாவில் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவர்கள். நான் இருவருக்குமே ரசிகன். அரசியலில் நான் இருவருக்கும் மேல் கொஞ்சம் அனுபவத்துடன் இருக்கிறேன் என டி.ராஜேந்தர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
சென்னை, தியாகராய நகரில் இன்று (நவ.21) டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களை வைத்து படமெடுத்த விஜயா ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் கூட இன்று சிக்கலில் இருக்கின்றன. அரசியலே வேண்டாம் என நான் ஒதுங்கியிருக்கும் சமயத்தில் விநியோகிஸ்தர்கள் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளேன்எனக் கூறினார்.
அப்போது நிருபர்கள், ஏன், உங்களால் அரசியலில் நிலைக்க முடியவில்லை எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், நான் ஆட்சியைப் பிடிப்பேன், முதல்வராவேன் என என்றைக்காவது சொல்லியிருக்கிறேனா?
அதன் பின்னர், இச்சூழலில் கமல்-ரஜினி இணைந்தால் என்ன நடக்கும் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
பேருந்து நடத்துநராக விசில் அடித்தவர் ரஜினி
களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி சினிமா களத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார் கமல். இவர்களெல்லாம் எனக்கு மூத்தவர்கள். என் மகன் திருமணத்திற்கு ரஜினிக்கு பத்திரிகை அளிக்கச் சென்றேன்.
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.