சிலம்பரசன் படத்துக்கு வந்த சோதனை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன்.
இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள்.
அவர்களும் விலை சொல்லுங்கள் எனக்கேட்க இவர்கள் சொன்ன விலை பத்து கோடியாம்.
விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சி நிறுவனம் மேலிடத்தில் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டார்களாம்.
அதன்பின் படக்குழுவினர் தொடர்பு கொண்டால் அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனராம்.
அந்தப்பக்கம் என்ன நடந்ததெனக் கேட்டால், இந்தப்படத்துக்குப் பத்துகோடியா? ஒரு கோடி ரூபாய்க்குத் தருகிறார்களா? கேளுங்கள் என்றிருக்கிறார்கள்.
அப்படி எல்லாம் கேட்கமுடியாது என்று தயங்கியவர்களிடம் அதிகபட்சம் இரண்டு கோடி தரலாம் அதற்கு மேல் முடியாது என்று சொல்லிவிட்டதாகத் தகவல்.
சிம்பு படத்துக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? என்று விசயமறிந்தவர்கள் வருத்தப்படுகிறார்கள்