விஜய்65 படப்பிடிப்பில் கொரானா தொற்று பாதித்த ஊழியர்

விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது.
இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 10,2020 அன்று வெளீயானது.ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சி படமாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.சுமார் நூறு பேர் கொண்ட படக்குழுவினர் இப்படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் விமானத்தில் ஏற்றினார்களாம்.
அங்கு போயும் பரிசோதனை செய்யப்பட்டதாம். அதன்பின் அனைவரும் படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டனராம்.இவ்வளவுக்கும் பிறகு ஒளிப்பதிவு உதவியாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாம். உடனடியாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனராம். இதனால் படக்குழுவுக்குக் கடும் அதிர்ச்சி.ஆனாலும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். ஏப்ரல் 26 வாக்கில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அனைவரும் சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது