அஞ்சலி செலுத்த வந்த விஐய் அமைதிகாக்கும் அஜீத்

ஐம்பத்தி இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார்.

இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட பல மாநில முதல்வர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அவருக்காகக் அஞ்சலிஉலகப் புகழ் பெற்றசச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட மட்டைப்பந்து வீரர்கள் அவருக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டனர்.

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம்,சூர்யா, கார்த்தி, விஷால்,சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட கதாநாயகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் அமைப்பு உள்ளிட்டு எல்லா அமைப்புகளும் இரங்கல் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகியோர் மட்டும் எவ்வித இரங்கல் குறிப்பும் வெளியிடாமல் இருந்தனர்.இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிக் கதாநாயகர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்திருக்கும்போது இவர்கள் மட்டும் எதுவும் சொல்லவில்லையே? என்கிறஎண்ணம்எல்லோருக்கும் இருந்தது.

இந்நிலையில் இன்று எஸ்பிபியின் இறுதிநிகழ்வுகள் நடக்கும்போது யாரும் எதிரபாரா விதமாக விஜய் நேரில் வந்தார். எஸ்.பி.சரணை அரவணைத்து ஆறுதல் சொன்ன அவர் எஸ்பிபியின் கால்தொட்டு வணங்கிஅஞ்சலி செலுத்தினார்.

இதனால் அவருக்குப் பல திசைகளிலிருந்தும் பாராட்டுகள் வருகின்றன.

எஸ்பிபிக்கு இறுதி அஞ்சலி செலுத்த சினிமா காரர்கள் பெரிதாக யாரும் வரவில்லை.எல்லோருக்கும் கொரோனாவால் மரண பயம்.பாரதிராஜா இந்த வயதில் இரண்டு தடவை வந்து போனார்.உதயநிதி ஸ்டாலின் வந்தார்.மற்றும் மயில்சாமி உட்பட சிலர் வந்தனர்.கொரோனா பயத்தை விட ஒரு மாபெரும் கலைஞனுக்கு இறுதி மரியாதை செய்வதே தர்மம் என்பதை உணர்ந்து வந்திருக்கிறார் விஐய் என்கிறது சினிமாவட்டாரம்
அதேநேரம், எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.சரணுடன் ஒன்றாகப் படித்தவர், எஸ்.பி.பியின் குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகியவர் என்று சொல்லப்படும் அஜீத் ஓர் இரங்கல்குறிப்பு கூட வெளியிடவில்லை என்பது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறது.