மீசையை துறந்த விஜய்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்

விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. விஜய் மீசை இல்லாமல் நடிக்கும் முதல் படமும் இதுவே.

விஜய்-மாளவிகா மோகனன் ஜோடியுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, அழகம் பெருமாள் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஜெயில் அரங்கு அமைத்து, அதில் படப்பிடிப்பு நடந்தது.விஜய் மீசையில்லாமல் நடித்த ஜெயில் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையை அடுத்த பனையூரில், பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. அதில் நேற்று முதல் படப்பிடிப்பு நடைபெறுகிறது.