குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கியவர் முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பில் புதிய படமொன்று உருவாகிறது என்று சொல்லப்பட்டது.முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு சொல்லியிருந்தாராம் விஷால்.அதற்குள் சன் தொலைக்காட்சியின் புலிக்குத்தி பாண்டி படத்துக்கு முத்தையா போய்விட்டதால் கோபமான விஷால், முத்தையா வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.இப்போது மனக்கசப்புகளை மறந்து முத்தையா இயக்கத்தில் நடிக்க விஷால் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
விஷால் இப்போது சக்ரா படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவற்றிற்கடுத்