புது இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதாஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.இப்படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஷால் படங்கள் தமிழ்,தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாவது வழக்கம். இம்முறை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் அதேநாளில் வெளியாகவிருக்கிறது.இந்தியில் இப்படத்துக்கு சக்ரா கா ரக்சக் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
விஷாலே தயாரித்துள்ள இந்தப்படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக்க வேண்டும் என்று அவர் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.அதனால், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படத்தைப் பெரிதாக விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுவேலைசெய்து
தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்
ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இந்தப்படத்தை முழுமூச்சாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக தடையை உடைத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விளம்பரம் கொடுத்திருக்கிறாராம் விஷால்