மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யாவின் 39 ஆவது படத்தின் இயக்குநர் ஹரி. அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர்வைக்கப்பட்டது.அந்தப்படத்
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும், 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டது.ஏப்ரல் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாரானதாம். கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப் போய்விட்டது என்று சொன்னார்கள்.
இந்நிலையில் சூர்யா,தான் தயாரித்து நடித்த சூரரைப்போற்று படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தார். அம்முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஹரி.
சூர்யாவைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கும் நேரத்தில் அவருக்கு எதிரான கருத்தைப் பொதுவெளியில் இயக்குநர் ஹரி சொல்லியிருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.இது எப்படி? ஏன்? என்று எல்லோருக்கும் கேள்வி எழுந்துள்ளது.அதுகுறித்து விசாரித்தபோது திரையுலகில் உலவும் தகவல்…அருவா படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி. அத்திரைக்கதை,இயக்குநர் ஹரியின் முந்தைய படங்களான சிம்பு நடித்த கோயில் மற்றும் சூர்யா இரட்டைவேடங்களில் நடித்த வேல் ஆகிய படங்களைக் கலந்தது போல் இருந்ததென்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின் கதைகளைக் கலந்து அதற்குள் மதநல்லிணக்கம் எனும் நற்கருத்தினைக் கலந்து திரைக்கதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.திரைக்கதையைகே
Prev Post
Next Post