ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாகக் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரானா தொற்று எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்புகின்றனராம்.திடீரென படப்பிடிப்பு இரத்தானதற்கு இதுதான் காரணம் என்று 3 முக்கிய விசயங்கள் சொல்லப்படுகின்றன.அவை….
1.ரஜினிகாந்துக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் அதனால் படப்பிடிப்பு இரத்தானது என்றும் ஒரு தகவல் இருக்கிறது. அதேசமயம், ரஜினிகாந்த்திற்கு மேற்கொள்ளப்பட்ட கொரானா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அவர் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2. அண்ணாத்த படப்பிடிப்பு முழுக்க இரவுகளிலேயே நடப்பதாலும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் படக்குழுவினருக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
3. டிசம்பர் 31 ஆம் தேதி புதுக்கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பதாக ரஜினி சொல்லியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி கட்சி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.அதனால் கட்சி தொடர்பான கேள்விகளைத் தவிர்க்கவே ரஜினிக்கு உடல்நலக்குறைவு என்றும் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இம்மூன்றில் எது சரியான தகவல் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.