லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.விக்ரம் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தைத் தயாரிப்பது டர்மெரிக் மீடியா என்கிற புதிய பட நிறுவனம்.இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கச் சொல்லிவிட்டாராம் கமல். ஆனால் தயாரிப்புத் தரப்பால் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதற்குக் காரணம், இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பணம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.தயாரிப்புத்
இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கமல் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுமட்டுமின்றி, படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் தொகை கொடுப்பதற்காகப் பணம் கொடுத்த பைனான்சியரும் படம் அடுத்த கட்டத்துக்கு நகராததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.