சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.
சூர்யா 40 என்று சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.முதல்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
கிராமப் புறங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதால் இப்படமும் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களைப் போல கிராமங்கள் சார்ந்து உறவுகள் பாசப்பிணைப்பு காதல் நகைச்சுவை ஆகியனவற்றை கலந்த குடும்பக் கதையாக இருக்கும் என்கிறார்கள்.
Prev Post