விக்ராந்த் ரோணாவில் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி

Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இயக்குநர் அனுப் பண்டாரி  இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படம் பான் வேர்ல்ட் 3-D ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் 2022 ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகஇருப்பதையொட்டி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.படத்தின் புரமோக்கள், விளம்பரங்கள் ஏற்கனவேபலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில்  இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.இந்த நேரத்தில், க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் எபிசோட் 7 நிமிட சிங்கிள்-ஷாட் காட்சியாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் ஒரு  தகவலை வெளியிட்டுள்ளனர்.இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே இசை ஆல்பங்களின்  தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.