‘பாகுபலி’ திரைப்படம் வெளியானதன் முந்தைய நாள் தான் தனது வாழ்நாளிலேயே மிகக் கடினமான நாளாக இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.
சினிமா ரசிகர்களைப் பார்த்து வியக்க வைத்த ஒரு பிரம்மாண்ட தென்னிந்திய சினிமாவைக் கூறுங்கள் ’என்று கேட்டால், பலரது நினைவிற்கும் ‘பாகுபலி’ திரைப்படம் முதலில் வந்து நிற்கும். ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்?’ என்ற கேள்வியை மிச்சம் வைத்து ‘பாகுபலி’ திரைப்படம் முடிந்தது. இந்தக் கதையை ஒரே பகுதியில் கூறிவிட இயலாது என்பதற்காக கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தரும் விதத்தில் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டவர்கள் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்தின் முதல்பாகம் வெளியாகி ஜூலை 10 உடன்ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகிறது. இந்த முக்கியமான தினத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷோபு ஜூலை 9 அன்றுஅவரது ட்விட்டர்.
பதிவில், “5 வருடங்களுக்கு முன்பு இந்த நேரத்தில் நாங்கள் எவ்வாறு இருந்தோம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இது தான் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நாளாக இருந்தது. ஆனால் அதனைக் கடந்து வந்துவிட்டோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி” என்று கூறியிருந்தார்.
படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவுறும் நிலையில், ‘பாகுபலி’ திரைப்படம் பார்த்த அனுபவங்களையும், தாங்கள் பார்த்து ரசித்த காட்சிகளையும் குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் பதிவிட்டனர்.