துக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்

துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

துக்ளக் தர்பார்படத்தின் முதல் பார்வை போஸ்டர்சன் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில் சூலை 8 மாலைவெளியிடப்பட்டது இந்த படத்தை மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் விக்ரம் நடித்து கொண்டிருக்கும் கோப்ரா, சீயான்- 60, காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தயாரிப்பதன் மூலம் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமாக மாறிவரும்செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்
சூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல்பார்வை

வெளியானதிலிருந்து அனைத்து
தரப்பினரின் கவனத்தையும், வரவேற்பையும் துக்ளக் தர்பார்பெற்று வருகிறதுஇதுவரை விஜய் சேதுபதி நடித்தபடங்களின்இயக்குனர்கள்
முதல்பார்வை போஸ்டரை
சமூகவலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன், புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, கவண் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பேட்ட இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ்,ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பட இயக்குநர் ஆறுமுக குமார்,சங்கத்தமிழன் பட இயக்குநர் விஜய்சந்தர்,றெக்க பட இயக்குநர் இரத்தின சிவா ஆகியோர் இதுவரைதுக்ளக் தர்பார் படத்தின் முதல்பார்வையைப் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரு நாயகன் நடித்த படத்தின் முதல் பார்வையை
இத்தனைஇயக்குநர்கள் வழிமொழிந்து பாராட்டு தெரிவிப்பது தமிழ் சினிமாவில்இதுவே முதல்முறை எனலாம். இதன் காரணமாக அரசியல் தலைப்பை கொண்ட”துக்ளக் தர்பார்” படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது