இப்படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அவற்றை முடிக்க மேலும் சில மாதங்கள் ஆகுமாம். அதன் பிறகே படத்தின் வெளியீட்டை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாகலாம் என்கிறார்கள்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்படத்தின் கடைசிகட்டப் படப்டிப்பு கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு நவம்பர் மாதக் கடைசியில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது.கடந்த
வாரம் இப்படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்தார் நாயகி ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை.இன்று நேற்று நாளை’ படத்திற்குப் பிறகு ரவிக்குமார் இயக்கி வரும் படம் இது.கடந்த வருட பிப்ரவரியில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.வேற்று கிரக மனிதர் ஒருவருடன் சிவகார்த்திகேயன் இருக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
Related Posts