ரசிகர்கள் இல்லாமாஸ்டர் ஆடியோ ரிலீஸ்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துஆடியோ வெளியிடுவதற்கான பணிகளும், இதர புரமோஷன் தொடர்பான பணிகளும் தொடங்கிவிட்டன.

விஜய்-விஜய்சேதுபதி-லோகேஷ்-மாளவிகா ஆகியோரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியைத் தான்.ஆனால், இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க முடியாத சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.

விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித் துறையின் ரெய்டு, மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற களேபரங்கள் என பல நிகழ்வுகளுக்கும் விஜய்யின் ரியாக்‌ஷன் என்ன என்பதை ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பார்த்துவிடவேண்டும் என விஜய் ரசிகர்களும், சினிமா துறையினரும்காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிகில் படத்திற்கு ஏற்பட்டது போல ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுவிடக்கூடாது என்பதிலும், அதற்காக பெரியளவில் நிகழ்ச்சியை நடத்தி தனது பதிலைக் கூறவேண்டும் என்றும் விரும்பினார்.

ஆனால், அப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடையாக பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
வழக்கமாக விஜய் திரைப்படத்தின் படங்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதுபோலவே பல கல்லூரிகளில் மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸை நடத்த முடிவெடுத்தது படக்குழு. கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் இதற்கான அனுமதி கேட்கப்பட்டபோது, அவர்கள் அனுமதி வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டனர்.
பிகில் திரைப்பட ஆடியோ ரிலீஸை சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் நடத்தியபோது ஏற்பட்ட பிரச்சினைகளையும், அதன்பின் அந்தக் கல்லூரிக்கு அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தையும் குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இதே காரணத்தை சென்னையிலுள்ள சில கல்லூரிகளும் முன்வைக்க பெரியளவில் இசை நிகழ்ச்சியை நடத்தும் முடிவை கைவிட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
மாஸ்டர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனம், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது. எனவே, நிகழ்ச்சியில் என்ன நடைபெறுகிறது என ரசிகர்கள் உடனடியாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை சென்னையிலேயே எளிமையாகநடத்த முடிவு செய்திருக்கின்றனர்.
இந்த யோசனை விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவரிடமிருந்து இதுவரையில் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. விஜய் சம்மதம் தெரிவித்தால், அதிக ஆடம்பரம் இல்லாமல் மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் நடைபெறும் என்று தெரிகிறது.