லைகா தயாரித்துள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தடபுடலாக அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை பத்திரிகையாளார்களுடன் பகிர்ந்துகொண்டார் சுபாஷ்கரன்.
தர்பார் திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பத்திரிகையாளார்கள் சந்திப்பில் சுபாஷ்கரன் ‘நான் 100% தமிழன் தான்’ என்று குறிப்பிட்டு பேசினார்.
மேலும், சுபாஷ்கரனைப் பாராட்டிப் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் “சுபாஷ்கரன் வாழ்க்கையையே ஒரு திரைப்படமாக எடுக்கவேண்டும். அந்தளவுக்கு சுவாரசியங்களும், விடாமுயற்சியும் நிறைந்தது அவர் வாழ்க்கை.