பட்டாஸ் முதல் நாள் வசூல்?

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பட்டாஸ்’. இந்த திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. ‘கொடி’ படத்திற்குப் பிறகு டபுள் ஆக்‌ஷனில் அப்பா, மகன் என தனுஷ் நடித்திருக்கும் படம் பட்டாஸ். நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹ்ரீன் பிர்சடா நடித்துள்ளார். இது புதுப்பேட்டை படத்திற்கு பின், தனுஷ் சினேகா மீண்டும் இணைந்துள்ள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான ‘தர்பார்’ படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருப்பதால், பட்டாஸ் குறைவான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாஸ் முதல் நாள் மொத்த வசூல் ஏரியா அடிப்படையில்…

சென்னை – 51 லட்ச ரூபாய்

செங்கல்பட்டு – ஒரு கோடியே 29 லட்ச ரூபாய்

கோவை – 80 லட்ச ரூபாய்

மதுரை – 65 லட்ச ரூபாய்

திருச்சி – 49 லட்ச ரூபாய்

சேலம் – 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்

நெல்லை – 30 லட்ச ரூபாய்

வேலூர், பாண்டிச்சேரி – 49 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்

ஆக மொத்தம் 4 கோடியே 94 லட்சம் ரூபாய் முதல் நாள் மொத்த வசூல் செய்துள்ளது பட்டாஸ் திரைப்படம்.