சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்

கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள்  மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், “சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடி தீர்த்த மக்கள் கைபோனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்து பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலக பயணம் எந்த திசை என கணிக்க முடியாமல் குழம்பிக்கிடக்கிறது இண்டஸ்ட்ரி. இதில் மக்களின் கருத்து என்ன? அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா? திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார் சேரன்.

சில வருடங்களுக்கு முன்பே தியேட்டர்களின் கடும் எதிர்ப்பை மீறி D2Hஎன்ற திட்டத்தைத் தொடங்கியவர்தான் சேரன். இதைக் குறிப்பிட்டு பலரும் அவரதுட்விட்டரில் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சேரனின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள பலரும் ஒரு சர்வே போலவே இதைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஒரு நிலைப்பாட்டுல இருங்க சேரன், கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நீங்க தான D2H ஆரம்பிச்சீங்க இப்போ அதான் OTT என்று நேசமணி என்பவர் பதில் சொல்ல, அதற்கு ரெஸ்பான்ஸ் செய்துள்ள சேரன், நான் எந்த முடிவையும், எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் சொல்லவில்லையே… கருத்துதான கேட்டேன்… என் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான்.. மக்கள் விரும்பும் தளங்களில் சினிமா பார்க்க வசதி இருக்கவேண்டும்.. அது தியேட்டராகவும் இருக்கலாம்.. மற்றவையாகவும் இருக்கலாம்என்று சொல்லியுள்ளார்.
மேலும் தியேட்டர்களுக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவு குறித்து ஆரோக்கியமான விவாதத்தை சேரனின் கருத்தை ஒட்டி நடத்தியிருக்கிறார்கள்.
பாரத் என்பவர், திரை அரங்கம் போல் ஏதும் வாராது.. கண்டிப்பாக கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்.. ஆனாலும் இந்த காலகட்டம் இந்திய சினிமாவை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.. என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு படி கீழே தான்என்று கருத்து தெரிவிக்க, செந்தீஸ்வரன் சிவனோ எதார்த்தத்தை மொழி பெயர்த்திருக்கிறார்.திரையரங்கம் இப்போது நல்ல படங்களுக்கானதாக இல்லை. பாரதி கண்ணம்மா வரும்போது இவ்வாறான சூழ்நிலை இருந்திருந்தால் உங்களைப்போன்ற படைப்பாளிகள் வருந்தலாம். இப்போது தலைமுறை வேறு ரசனை வேறு. உங்களைப் போன்றவர்களின் படைப்புகளை ரசிப்பவர்கள் உத்யோகம் காரணமான தடைகள் இருப்பதால் இணைய படங்கள் நல்லதுஎன்று கூறியிருக்கிறார் அவர்.OTTக்கும் தியேட்டருக்குமான நிலைகுறித்து சஃபருல்லா, “இது காலத்தின் கட்டாயம். அமெரிக்கா, ஐரோப்பியா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் திரையரங்கம் உள்ளது. OTT யும் உள்ளது. அங்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் நல்ல வசூலை தருகின்றன, இங்கு மட்டும் ஏன் OTTயை வெறுக்கிறீர்கள்?என்று பொதுவான கேள்வியைத் தொடுத்துள்ளார்.

சரவணகுமார் என்பவர், திரையரங்குகள் தனது செல்வாக்கை இழக்க தொடங்கி பலகாலமாகிவிட்டது ஒரு காலத்தில் நடுத்தரமக்களின் பெரிய சந்தோசம் குடும்பத்துடன் திரையரங்கம் செல்வது. ஆனால் அங்கு சிறு உணவு பொருள்களில் கூட கொள்ளை லாபமடைய துடிக்கும் திரையரங்கினரின் பேராசை மக்களை அச்சுறுத்துகிறது, இந்த நிலை மாற வேண்டும் என்று தியேட்டர்களின் கொள்ளையை குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் பெரும்பாலான ட்விட்டர் வாசிகள், செல்போனில் பார்ப்பதை விட தியேட்டர்களில் படம் பார்ப்பதையே விரும்புகிறோம். மனப் புழுக்கத்தில் இருக்கும் மனதுக்கு திரையரங்கமே ரிலாக்ஸ் ஆக இருக்கிறது. என்னதான் வீட்டில் சாமி கும்பிட்டாலும் கோயிலுக்குள் செல்லும்போது கிடைக்கும் நிம்மதிக்கு இணையில்லை. அதுபோல தியேட்டர்தான் கொண்டாட்டமாக இருக்கும்என்று கருத்து கூறியுள்ளனர்.
ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் இருக்கும் பலரே தியேட்டர்களில் படம் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். சேரன்எப்போதும்வித்தியாசமானவர். தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஓர் ஆரோக்கியமான விவாதத்துக்கு அடித்தளமிட்டிருக்கிறார்

தியேட்டர்கள் திறக்கப்பட்டால் படம் பார்க்க மக்கள் வருவார்களா என்கிற ஐயப்பாட்டுக்கு சேரன் நடத்திய ஆரோக்கிய விவாதத்தின் மூலம் திரையரங்கத்தில் படம் பார்க்கும் அனுபவம் தவிர்க்க முடியாதது, மன இறுக்கத்தில் வாழும் மனிதனுக்கு அது தேவையான ஒன்று என கருத்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது சேரன் போன்று பிற பிரபல திரையுலகினரும் இது போன்ற விவாதங்களை தொடங்கிவைப்பது தியேட்டர்கள் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்க கூடியது என மக்களை கூற வைக்க முடியும் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்