மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு குடும்பத்திற்கு உதவும் நடிகர் விஷால்

சமீபத்தில் கொரானா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு.
அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மறைந்துவிட்டார்.

தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து மற்றவர்களின் உடல் நலனுக்குக் காரணமாக இருந்த கே.பாலு மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தத் திடீர் துயரத்தை அறிந்த நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்ட நினைவஞ்சலி (4.01.2021)கூட்டத்திற்குத் தன் மேலாளர் ஹரியை அனுப்பி,
சமீபத்தில் கே.பி.பிலிம்ஸ் தயாரிப்பில், புதிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில், விஷால் நடிக்கும் படத்தின் பூஜை ஸ்டில்லைக் கொடுத்து கலந்து கொண்ட அனைத்துத் தயாரிப்பாளர்களின் முன்னிலையில், நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒரு உறுதி மொழியைக் கொடுத்திருக்கிறார்.அதில், வரும் மார்ச் மாதத்தில் கே.பி.பிலிம்ஸ் தயாரிப்பில், புதிய இயக்குநர் சரவணன் இயக்க, திரு. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,விஷால் நடிக்கும் படம் ஒரே ஷெட்யூலில் ஆரம்பித்து முடிக்கப்பட்டு, அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் மொத்தப் படத்தையும் முடித்து, கிடைக்கும் லாபம் அனைத்தையும் மறைந்த கே.பாலு அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப் போவதாகக் கூறினார்.இதனை விஷாலின் மேலாளர் ஹரி நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு வந்திருந்து செய்தியைக் கூறினார். அதனை தயாரிப்பாளர் டி.சிவா உறுதி செய்தார்.அங்கு வந்திருந்த
கே. பாலுவின் குடும்பத்தினர் இந்தச் செய்தியை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டனர்.ஏற்கெனவே

கே. பாலுவிடம் நடிப்பதற்காக
திரு. விஷால் முன்தொகை வாங்கியிருந்தார்.பாலு மறைந்த
இந்தச் சமயத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, படம் நடித்து அவருடைய குடும்பத்திற்கு உதவுவதற்கு முன் வந்த விஷாலை அனைவரும் பாராட்டினார்கள்.
அனைத்துத் தயாரிப்பாளர்களும்
இணைந்து இந்த விசயத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்போம் என்றும் கூறினார்கள்.இந்தப் படத்துக்காக விஷால் கொடுத்திருக்கும் தேதிகளில், பெரிய சம்பளம் கொடுத்து நடிக்க இன்னொரு பெரிய நிறுவனம் அழைத்திருந்தது என்றும் அதைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தை முதலில் தொடங்கிய விஷால் பாராட்டுக்குரியவர் என்றும் சொல்கிறார்கள்.